பிரபல சீர்திருத்த பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (1834-1892), “சத்தியத்தைக் கபடமில்லாமல் எடுத்துக்கூறாமலும், கொள்கைப் பஞ்சத்தோடும் இருக்கும் பத்திரிகையை இலக்கியத்தொல்லை என்றுதான் கூறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய வார்த்தைகளுக்கிணங்க கர்த்தரின் வழிநடத்தலின்படி இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு இடங்கொடாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், சீர்திருத்தவாத பியூரிட்டன் போதனைகளையும், கிறிஸ்தவ வரலாற்று நிகழ்வுகளையும், முறைப்படுத்தப்பட்ட இறையியலின் அனைத்து அம்சங்களையும், வேதபூர்வமான கண்ணோட்டத்தில் சமகால நிகழ்வுகளையும், போதகப் பயன்பாடுகளோடு அப்பழுக்கில்லாமல் கர்த்தரின் மகிமைக்காகத் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு வழங்கி வருவதே எங்களின் தலையாய நோக்கம். தொடர்ந்து வாசியுங்கள்; சிந்தியுங்கள், வாசிப்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள். “அவசர வாசிப்பு குறைந்தளவான அறிவையும், அதிகளவான ஆணவத்தையுமே அளிக்கும்” என்கிறார் பிரபல பிரசங்கியார் சார்ள்ஸ் ஸ்பர்ஜன். அதனால் நிதானித்து வாசியுங்கள்; வளம்பெருங்கள்.