பிரபல சீர்திருத்த பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (1834-1892), “சத்தியத்தைக் கபடமில்லாமல் எடுத்துக்கூறாமலும், கொள்கைப் பஞ்சத்தோடும் இருக்கும் பத்திரிகையை இலக்கியத்தொல்லை என்றுதான் கூறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் (சீர்திருத்த பாப்திஸ்து) சபையில் (ஆங்கிலம்) கடந்த 39 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, South Wales, UK) இறையியல் பயின்றவர்.